Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Sunday, 28 August 2016

பலுசிஸ்தானை வைத்து பாகிஸ்தானை பிளக்கும் மோடி

பக்கத்து  வீட்டு (நாட்டு )காரர்கள்  எதிர்வீட்டுகாரர்களை 
சில  நிமிடங்கள் ஒதுக்கி தெரிந்து கொள்வோம்

காஷ்மீர் மட்டுமல்ல  உலகில் உள்ள பெரும்பான்மை யான நாடுகளிலும் இனத்தின் பெயரிலோ அல்லது மதத் தின் பெயரிலோ தனி நாடு  கேட்டு போராட்டங்கள் நடந்து கொண் டேயி ருக்கிறது.
சம்பந்தபட்ட நாட்டு அரசாங்கங்கள் போராட்டத்தை ராணுவத்தை வைத்து அடக்கி வருகிறது.
இதை அறிந்திருந்தும் சில முற் போக்கு முட்டாள்கள் காஸ்மீரில்  முஸ்லிம் களை கொன்று இந்திய அரசு மனித உரி மை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்று வீதிக்கு வீதி மீட்டிங் போட்டு பேசி வருகிறார்கள்.இது தான் அவர்கள் தாய் நாட்டின் மீது வைத்த்திருக்கும் தேசபக்தி.
சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் காம்ரேட்  ஸ்டாலினால் கொன்று குவிக்கப் பட்ட செசன்யா முஸ்லீம்கள் எத்தனை லட்சம் தெரியு மா?ஹிட்லர் யூதர்களை கொன்றதை விட அதிகமானது.
சீனாவில்  கூட ஒரே நாளில் 10,000 உய்க்குர் முஸ்லிம் களை சீன கம்யூனிச அரசு  கொன்றதை எத்தனை அறிவு ஜீவிகள் பட்டி மன்றம்போட்டு விவாதித்து இருப்பார்கள்.
சீனாவில் சின்ஜியாங் மாநிலத்தில் உய்க்குர் என்கிற முஸ்லிம்கள் தான் மெஜாரிட்டி.காலப்போக்கில் சீனா தன்னுடைய கைப்பிடிக் குள் இந்த மாநிலம் இருக்க வேண்டும் என்பதற்காக சீனர்களை  அங்கே குடியமர்த்தி உய்க்குர் மக்களை மாநிலத்தை விட்டு சிதற வைத்தார்கள்.
எப்படி காஸ்மீரில் பூர்வ குடிமக்களான பண்டிட்கள்
முஸ்லிம்களால் விரட்டப்பட்டார்களோ அதே மாதிரி
சீனாவில் சின்ஜியாங் மாநிலத்தில் சீனர்களால் உய்க்குர்
முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர்.
இப்பொழுது அங்கேயும்
ஆயுதம் ஏந்தி கிழக்கு துருக்கிஸ்தான் விடுதலை போரா ட்டம் என்கிற பெயரில் ஆயுத போராட்டம் நடந்துக்கொ ண் டிருக்கிறது.இதை சீனா நசுக்கி வருகிறது.. அங்கே எல்லாம் மனித உரிமை மீறல்கள் என்று யாரும் ஒப்பாரி
வைக்க முடியாது.டாங்கிகளை  வைத்து சமாதியாக்கி விடு வார்கள்
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் கூட
அங்குள்ள பழங்குடி  ஸியா பிரிவு முஸ்லிம்கள் தனி நாடு கேட்டுவருகிறார்கள்.
இவர்களுக்கு அமெரிக்காவும் ஆதரவுஅளித்து வருகிறது.இந்திய சுதந்திரபோர் மாதிரி மூன்றுசுதந்திர போர்களை நடத்தியுள்ளார்கள் பலுசிஸ் தான் மக்கள்.
எத்தனையோ பலுசிஸ்தான் விடுதலை போராட்டதலைவர்கள்  பாகிஸ்தான் இராணுவத்தினால் கொல்ல பட் டாலும் இன்று வரை பலுசசுகளின் சுதந்திர தாகம்முடியவில்லை.இது வரை மறைமுகமாக பலுசி ஸ் தான் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தது இந்தியா.
இந்நிலையில் தான் சுதந்திர தின உரையின் பொழுது
மோடி திட்டமிட்டு பலுசிஸ்தான் மாநிலத்தில் பாகிஸ் தானிடம் இருந்து விடுதலை வேண்டி ஆயுதம் ஏந்தி
போராடி வரும் பலுசிஸ் தான் விடுதலை இயக்கத்தை
அழிக்க பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் படுகொ லை களை பற்றி வாய் திறந்தார்.
இதுவரை காஸ்மீரில் உள்ள  முஸ்லிம்களை இன ரீதியாக தூண்டி விட்டு பின்னால் நின்று குளிர் காய்ந்து வந்த பாகிஸ்தான் மோடியின்பலுசிஸ்தான் பேச்சினால் அலற ஆரம்பித் துள்ளது.
பின்னே இருக்காதா..எப்படி இந்தியாவுக்கு காஸ்மீர் பிரச்சனையோ அதே மாதிரி பாகிஸ்தானுக்கு பலுசிஸ் தான் பிரச்சனை.
இங்கேயும் இன ரீதியான பிரச்சனை தான்இந்த பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான்.
பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ் தா னுக்கும் நடுவில் உள்ளது  எட்டும் தொலைவில் ஈரான்உள்ளது.அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஸியாமுஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்
காஷ்மீர் மாதிரி யே  மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11 ம் தேதி ஆங்கிலேய ரிடமிருந்துவிடுதலை பெற்றது.காஷ்மீர் மாதிரியே பலுசிஸ்தானும்இந்தியாவுடனே இணைய விரும்பியது.ஏனெனில் அப்பொழுது பலுசிஸ்தானில் மட்டும் சுமார் 55,000 இந்துக்கள் இருந்தார்கள். இப்பொழு தும் 30,000க்கும் மேற்பட்ட இந்துக்கள் பலுசிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியப்பிரிவினையின் பொழுது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும்  இந்தியா வை நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். இது நடக்காத
முஸ்லிம்கள் வாழ்ந்த ஒரே பகுதி பலுசிஸ்தான் மட்டும் தான்.
அவ்வளவுக்கு மத சகிப்புதன்மை உடையவர்கள்  பலூசிஸ்தான் மக்கள் .பலூச்சுகளின் நல்ல குணத்துக்கு இன்னொருஉதாரணம் அயோத்தி பாபர்மசூதி இடிப்பு.
பாபர் மசூதி இடிக்கபட்டவுடன் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் எல்லாம் எதிர்வினையாக இந்துக்கோயில்கள்
எல்லாம் இடிக்கப்பட்டது.ஆனால்பலுசிஸ்தானில் மட்டு ம் ஹிந்துக்கோயில் எதுவும் இடிக்கப்படவில்லை. இதில் இருந்து பலுசிஸ்தான் பகுதகளில் இந்தியாவுக்கு இன்றும்
இருக்கும் ஆதரவை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா உடைந்து பாகிஸ்தான் உதயமானவுடன் குட்டி குட்டிசமஸ்தானங்கள் தங்களுக்கு என தனியாக ஒரு ராணுவ த்தை அமைத்து தீனி போட முடியாது என்ப தா ல் இந்தியாஅல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொள் ளுங் கள் என்று ஆங்கிலேய அரசினால் அறிவுறுத்தப்ப ட்டிருந்தது
கிட்ட தட்ட எல்லா சமஸ்சதானங்களும் இந்தியாவுடன் இணையவே விரும்பியது.அது மாதிரியே பலுசிஸ்தா னைஆண்டு வந்த அகமத்யர கான் என்கிற ராஜா நம்ம காஷ்மீர் ராஜா ஹரிசிங் மாதிரி இந்தியாவுடன் இணைய வே விரும்பினார்.ஏனென்றால் பாரதம் அறிவார்ந்த தேசம்மட்டுமல்ல..அன்பார்ந்த தேசம்.
இந்தியாவுடன் இணைய பலுசிஸ்தான் மன்னர்  ஐயா நேரு அவர்களே இந்த பாகிஸ்தான் காட்டு மிராண்டி களின் சங்காத்தியமே எங்களுக்கு வேண்டாம் உங்கள் ஜோதி யில்  நாங்களும் வந்து ஐக்கியமாக் விரும்புகி றோம் என்று கடிதம் எழுதிநேருவுக்கு அனுப்பினார்.
ஆனால் நம்ம சமாதானபுறா போங்கப்பா.. இருக்கிறவ ங்களையே எங்களால் கட்டி மேய்க்க முடியவில்லை.. இதில் நீங்க வேறா..இங்கே இடமில்லை  போங்கப்பா என்று மறுத்து விட்டார்.
இதனால் கோபமான பலுசிஸ்தான் மன்னர்  அகமத்யர் கான் ஜின்னாவுடன் வேறு வழியின்றி   இராணுவ உடன் படிக்கை வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் 1947 ம் ஆண்டு அக்டோபர் 27 ம் தேதி ஐக்கியமானது.
இதனால் பதறிப்போன பாகிஸ்தான்
பலுசிஸ்தானும் கையை விட்டு போககூடாது என்கிற
பயத்தினால் 1948 மார்ச் 27ல் அதிரடிப் படையெடுப்பால் பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்துக் கொண்டது.
எப்படி காஸ்மீரில் பண்டிட்கள் விரட்டப்பட்டு முழுக்க முழுக்க முஸ்லிம்கள் கையில் காஷ்மீர் சிக்கிக் கொ ண்ட தோ அதே மாதிரி ஸியா பிரிவை சேர்ந்த முஸ்லி மகளை  விரட்டி விட்டு சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லி ம்களை குடியமர்த்தி பலுசிஸ்தான் ஆட்சி திட்டமிட்டு சன்னி முஸ்லிம்களின் கைக்கு  கொண்டு செல்லப் பட்டது.
பார்த்தார்கள்.. ஸியா முஸ்லிம்கள்.தங்களின் பூர்வீக பூமியை  விட்டுக் கொடுக்க அவர்கள் என்ன காஷ்மீர் பண்டிட் களை போல இளிச்சவாயர்களா,,இல்லையே  காயிர் பக்ஸ் மாரி, அதுல்லா கான் மெங்கல், நவாப் அக்பர்கான் புக்தி போன்ற தலைவர்கள் பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஆயுத வடிவில் கொண்டு சென்றார்கள்.
இன்றைக்கும்  இலங்கையில் தனி நாடு கேட்டு போரா டிய விடுதலை புலிகளை கிட்டதட்ட அனைத்து நாடுகளும் தீவிரவாத இயக்கம் என்று சொன்னார்கள்.ஆனால் பலுசி ஸ்தான் விடுதலை இயக்கத்தை பெரும்பான்மை நாடுகள்கண்டு கொள்ளவில்லை.ஏன் என்றால் அமெரிக்கா இந்த இயக்கத்து க்கு ஆதரவு கொடுத்துள்ளது என்றால் இத ற்கு பின்னால்இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளலாம்.
பலுசிஸ்தான் பற்றி மோடி பேசியவுடன் பாகிஸ்தான் பயந்து அலறுகிறதே.இது எதற்கு தெரியுமா?
இங்கு தான்
குவாடர் துறைமுகம் உள்ளது.சரி அதனால்என்ன என்
கிறீர்களா..
இந்த குவாடர் துறைமுகம் தற்பொ ழுது சீனா வின் கஸ்டடியில் உள்ளது.இதற்கு பலுசி மக்கள்எதிர்ப்பு
தெரிவித்து வருகிறார்கள்.ஒரு வேளை பலூசிஸ் தான் தனி நாடு கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண் டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானை விட சீனாவுக்கு
தான் அதிகம்
.
பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாக்கினால் வளை குடா நாடுகளிலிருந்து பலுசிஸ்தான் வழியாக சீனாவுக் கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது சிக்கலாகி விடு ம். பலுசிஸ்தானை சுற்றி சீனா பின்னியுள்ள வர்த்தக ரீதியிலான திட்டங்கள் அம்போவாகி விடும் .
வல்லரசு போட்டியில் பாய்ந்து செல்லும் சீனாவை தட்டிவிட அமெரிக்காவும் பக்கத்தில் இருந்து கொண்டு குடைச்சல்
கொடுத்துக்கொண்டிருக்கும் சீனாவுக்கு செக் வைக்க
இந்தியாவும்  இதைத்தான் விரும்புகிறது.
இதனால் தான் மோடியும் இதுவரை பலுசிஸ்தான் பிரச்ச னையில் வாய்மூடிக்கொண்டு இருந்த இந்திய பிரதமர் கள் போல் அல்லாது என்னடா காஷ்மீர் பிரச்சனை நாங் கள்கொண்டு போகிறோம் பலுசிஸ்தான் பிரச்சனை யை இதைஉலக அரங்கில் என்று சவால் விட்டுவிட்டார்.
இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
எப்படி இலங்கையில் சீனாவின் ஆளுமையை வீழத்த ராஜபக்சேவைவீட்டுக்கு அனுப்ப இந்தியாவும் அமெரிக் கா வும் இணை ந்துசெயல்பட்டதோ அதே மாதிரி பலுசி ஸ்தானில் காலூ ன்றிஉள்ள சீனாவை காலி செய்ய அமெரிக்காவும் இந்தி யாவும் இணைந்து செயல்பட  உள் ளது.
இதனால் தான் மோடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை மீட்போம் பலுசிஸ் தானை தனிநாடாக உருவாக்க துணை புரிவோம் என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்
நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை இந்திராகாந்தி தவிர்த்த
பலுசிஸ்தானை மோடி மட்டும் விரும்புகிறார் என்றால்
அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது.
வி ரை வில் பலுசி ஸ்தான் என்கிற தனி தேசம் உதயமா னால் அது ஆசிய கண்டத்தில் வில் இந்தியாவின் ஆதிக் கம் அதிகரிக்க வழி வகுக்கும்.
எப்படி வங்காள தேசம் இந்திராவின்  உதவியால் உருவானதோ அதே மாதிரி பலுசிஸ்தான் என்கிற நாடுமோடியின் முயற்சியினால் பிறக்கும்.

No comments:

Post a Comment