Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Sunday 28 August 2016

ஊடகங்களின் எண்ணப் போக்கை வெளிப்படுத்தவே இந்த பதிவ

ஒரு சினிமா நடிகனுக்கு விருது கொடுத்தால் அத்தனை ஊடகங்களும் தலைப்பு செய்தியாக அதை போடுகின்றன.  ஆனால் ஒரு அறிஞருக்கோ,  ஒரு சமூக போராளிக்கோ அது வழங்கப்பட்டால் அதே ஊடகங்கள் அதை கண்டு கொள்வதே இல்லை.  சமீபத்தில் நடிகர் கமலஹாசனுக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டதும்  அத்தனை தொலைக்காட்சிகளும் அதை தலைப்பு செய்தியாக போட்டது.  அத்தனை அரை மனிதர்களும் அதை ஆர்பரித்தனர்.  இனி பதாகைகள் அனைத்திலும் "செவாலியர் கமலஹாசன்"  என்றே குறிக்கப்படும்.  ஆனால் அதே விருதை வட ஆற்காடு நாவல்பாக்கம் கிராம‌த்தை சேர்ந்த "என் எஸ் ராமானுஜ‌ தாத்தாச்சார்யா" எனும் ஒரு தமிழனுக்கு வழங்கபட்ட போது ஊடகங்கள் அதை குறித்து வாய்திறக்கவில்லை.  அப்படி ஒரு விருது இந்த‌ தமிழனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது கூட எந்த‌ தமிழனுக்கும் தெரியாது. இதில் வேடிக்கை என்னவென்றால் "என் எஸ் ஆர் சுவாமி" அவர்களும்  கமலஹாசனும் ஒரே சமூகத்தை (ஐயங்கார்) சேர்ந்தவர்கள்.  ஆகையால் இதை சமூக ரீதியாகவும் அனுக இயலாது.  அப்படியேனில் ஏன் இந்த வேறுபாடு !!
கமலஹாசன் ஒரு நாத்திகவாதி அல்லது குழப்பவாதி.  தன் திரைப்படங்களில் இந்து விரோதத்தையும்,  கம்யூனிஸ சிந்தனைகளையும் உமிழ்பவர்.  ஆகையால் அவருக்கு அளிக்கப்பட்ட விருது,  அவரின் மேதாவித்தனத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.  ஒரு தமிழனின் சாதனையாக சித்தரிக்கப்படுகிறது.  ஆனால் என் எஸ் ஆர் சுவாமி அவர்களோ,  ஒரு சமஸ்க்ருத அறிஞர்.   தமிழ்,  சமஸ்க்ருதம் தவிர தெலுங்கு,  ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசக் கூடியவர்.  அவர் செய்த ஒரே பாவம் அவர் சமஸ்க்ருதத்தில் புலமை பெற்றதுதான்.  அதனால்தான் திராவிட சிந்தனையில் ஊறிய ஊடகங்கள் அவரை புறக்கனித்தன.. 
"வித்யா ததாதி விநயம்" என்று சமஸ்க்ருதத்தில் சொல்வார்கள் (தூய்மையான அறிவு பனிவை கொடுக்கிறது) அதற்கு இலக்கனமாக என் எஸ் ஆர் சுவாமி திகழ்க்கிறார்.   சமஸ்க்ருதத்தில் சிறுவயதிலேயே விற்பன்னராக திகழ்ந்த‌ என் எஸ் ஆர் சுவாமி அவர்கள், திருப்பதியில் உள்ள "ராஷ்ட்ரிய சமஸ்க்ருத வித்யாபீடத்தின்" முதல் "வைஸ் சேன்ஸலராக" பொறுப்பேற்றார்.  சமஸ்க்ருத ஆய்வுகளில் அவர் பல புதிய பரினாமங்களை வெளிக் கொணர்ந்தார்.  . அவரின் புலமையையும்,  அவரின் பங்களிப்பையும் விளக்கினால் நமக்கு புரியுமா என்பதே கேள்வி.   குறிப்பாக சனாதன தர்மத்தின் ஆறு ஆஸ்திக மார்கங்களில் ஒன்றான "நியாய" மார்கத்தை அற்புதமாக வெளிக் கொணர்ந்தவர் என் எஸ் ஆர் சுவாமி அவர்கள்.   "கே இ தேவதத்தாசார்யா" எனும் அறிஞரின் வார்த்தைகளில்,  "நியாய‌  மார்கத்தை, என் எஸ் ஆர் சுவாமி அவர்களின் உரைகள் இல்லாமல் இன்று மாணவர்கள் படிப்பது அரிதிலும் அரிது"
அவர் ஓய்வு பெற்ற வேளையில்,  புதுச்சேரியில் உள்ள "பிரென்சு இன்ஸ்டிட்யூட்", அவரை பெரிதும் மதித்து வரவேற்றது.   "தாங்கள் எதுவுமே செய்ய வேண்டாம்,  தங்களின் இருப்பு எங்கள் கல்வி நிறுவனத்தில் இருந்தால் போதுமானது" என்று அவரிடம் கூறப்பட்டது.  ஆனால் சுவாமி அவர்களோ சமஸ்க்ருதத்தை பல்வேறு கோனங்களில் ஆராய்ந்து “An Inquiry into Indian Theories of Verbal Cognition.”எனும் அற்புதமான ஒரு புத்தகத்தை நான்கு பாகங்களாக வெளியிட்டார்.  இதற்காக சுவாமி அவர்கள் 140 மூலப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.   
என் எஸ் ஆர் சுவாமி அவர்களின் ஆழமான புலமையை வியந்து ஒரு முறை அறிஞர்கள் அவரை மேடையில் பாராட்டிய போது,  அவர் ஸ்ரீமத் ராமானுஜரிடம்,  பெரிய திருமலை நம்பி அவர்கள் குறிப்பிட்டதையே குறிப்பிட்டார். "அடியேனை விட தாழ்ந்தவன் ஒருவன் இருக்க இயலுமா ? என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை"  என்பதே அவ்வரிகள்.
கமலஹாசனோடு இவரை ஒப்பீடு செய்வதே தாத்தாச்சாரியார் அவர்களுக்கு செய்யும் அவமரியாதை என்றாலும்,  ஊடகங்களின் எண்ணப் போக்கை வெளிப்படுத்தவே இந்த பதிவு.

No comments:

Post a Comment