Date: 03.01.2016
நீங்கள் ஆண்டவனிடம் முற்றிலும் சரணடைந்துள்ளதர்க்கு அத்தாட்சி என்ன? சோதனைகள் வரும் . அவைகளில் தோற்றால் உங்கள் சரணாகதி முழுமை அல்ல என்று அறிக . உங்கள் சரணாகதி முளுமையாயின், எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதில் வெற்றி பெறுவீர். சோதனைகளில் வெற்றிபெற்றால் எத்தகைய தீங்கு நேர்ந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏன்? உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பல்ல. வருவன யாவும் ஆண்டவனிடமிருந்து வருகின்றன.
சரணடைதல் ஆரம்பத்தில் எளிதன்று. ஏனெனில் உங்கள் அகந்தை முழுமையாக சரணடைய விடாது.
"அப்படியானால், விருப்ப சுதந்திரம் என்பது என்ன?" என்று நீங்கள் வினவலாம். விருப்ப சுதந்திரம் என்பது பொறுப்பை உங்களிடம் வைத்து கொள்ளுதல் அல்லது ஆண்டவனிடம் ஒப்படைத்தல் என்று பொருள்படும். பொறுப்பை உங்களிடமே வைத்து கொண்டால் சிக்கல்கள், கஷ்டங்கள், குழப்பங்கள் முதலியவைகளை நீங்களே தாங்கி கொள்ள வேண்டும். இவைகளை தாங்கி தாங்கி ஒய்ந்த பின், இறுதியாக, "ஆண்டவனே , நான் ஓய்ந்து விட்டேன். இனிமேல் என்னால் எதையும் தாங்க முடியாது. இழுப்பு கயிற்றை உன்னுடைய கைகளில் கொடுத்துவிட்டு உம்பின்னால் உட்கார்ந்து கொள்கிறேன். நீ ஒட்டியருள்க " என்று முரைஇடுவீர்.
உங்கள் அகந்தை முற்றிலும் அடங்கியபின், இத்தகைய நேரம் வரும். அப்பொழுது, மற்றவர்களுக்கு நீங்கள் செயல்களை செய்வதாக தோன்றினாலும், நீங்கள் அவைகளை செய்வதில்லை என்பதை அறிவீர். நீங்கள் செய்விக்கபடுகிரீர் . அத்தகைய முழு சரணாகதியை மிகவும் கடினம். ஏனெனில் அகந்தை தன் அதிகாரதை எளிதில்விட்டுவிடாது. பெரிய போர் மூளும். உங்கள் ஆற்றலால் அகந்தையை வெல்ல வேண்டும்.
No comments:
Post a Comment