'வரும், 2018ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காஸ் சிலிண்டர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காஸ் சிலிண்டர் கசிவு குறித்து புகார் தெரிவிக்க, '1906' என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அறிமுக விழாவில் பெட்ரோலிய துறை இணை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, தர்மேந்திர பிரதான் பேசியதாவது:இந்த ஆண்டை சமையல் காஸ் நுகர்வோர் ஆண்டாக அறிவித்துள்ளோம். நாடு முழுவதும், 27 கோடி சமையல் காஸ் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். அவர்களில், 16.5 கோடி பேர் தொடர்ச்சியாக பயன்படுத்தி
வரும் சந்தாதாரர்கள். நாட்டின் மக்கள்தொகையில், 60 சதவீதம் பேர் சமையல் காஸ் கிடைக்க பெற்றுள்ளனர். 2018ம் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் சமையல் காஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர்கள், 'ஆன்லைன்' மூலம், 'பில்' பெறும் வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment